Police Department News

வங்கி கடன் கிரடிட் கார்டு வாங்கியுள்ளோர் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

வங்கி கடன் கிரடிட் கார்டு வாங்கியுள்ளோர் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

  1. வங்கியில் கடன்,
    கிரடிட் கார்டு,
    கல்வி கடன் வசூல் என எதுவாக இருந்தாலும் எல்லாமே சிவில் நடைமுறைதான்.
  2. எக்காரணம் கொண்டும் வங்கிகள் கடனாளர் மீது கிரிமினல் நடவடிக்கைகளை எடுக்க கூடாது. இது ரிசர்வ் வங்கியின் வழிமுறை.
  3. கடனின் தவணைகள் தாமதமானால்,
    வங்கி முறைப்படி பணத்தை கேட்கலாம் அல்லது கடிதம் அனுப்பலாம்,
    மாறாக கடன் வாங்கியோரின் வீட்டினுள் நுழைந்து பணம் வசூலிக்க முயலுவது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 441 யின் படி குற்றம்.
  4. பணத்தை கேட்டோ,
    வசூலிக்கவோ வங்கி ஊழியர்களோ, முகவர்களோ
    செல்போனில் அவதூறாக பேசினால், IPC Section 499 படி மிரட்டினால் IPC Section 503 படி வீட்டின் வெளியே நின்று பலர் முயிலையில் கெட்ட வார்த்தை பேசினால் IPC section 294B படி குற்றம் ஆகும்.
  5. கடன் தவணையை கேட்டு தொடர்ந்து வங்கி தொல்லை கொடுத்தால் மேற்கண்ட பிரிவுகளை குறிப்பிட்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
  6. அதேநேரம் உங்கள் பகுதியில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் Order VII, Rule 1 of Civil Proceedure Code யில் மனு தாக்கல் செய்து, Order XXXIX, Rule 1 of Civil Proceedure Code யில் தடை உத்தரவை பெறலாம்.
  7. கடன் தவணை நிலுவை தொகையை வசூலிக்க வங்கி சிவில் நடைமுறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும், ஊழியர்களை, முகவர்களை கொண்டு மிரட்டுவது குற்றம்.

Leave a Reply

Your email address will not be published.