மதுரை, ஆயுதப்படை மைதானத்தில் மின்னனு நூலகம் திறப்புவிழா
மதுரை மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆயுதப்படை காவலர்கள், அவர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மின்னனு நூலகம்,(E-Library) திறப்பு விழா 15.10.2021 இன்று நடைபெற்றது மதுரை, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக மின்னனு நூலகத்தை 15/10/2021 அன்று மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி காமினி IPS,அவர்கள் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் பல்வேறு வகைப்பட்ட புத்தகங்கள், இடம் பெற்றன, சிறுவர்களுக்கான புத்தகங்கள், மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள்,போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான புத்தகங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மின்னனு நூலகம் செயல் படுவதற்காக இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மின்னனு அல்லாமல் 1000 க்கும் மேறபட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நூலகமானது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட உள்ளது. இவ்விழாவில் மதுரை மாவட்ட ஆயுதப்படை, காவல் அதிகாரிகள் (மற்றும்) காவல் ஆளிநர்கள் அவர்களது குழந்தைகள் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் (மற்றும்) தூய்மை பணியாளர்களுகு கொரோனா நோய்தொற்றில் இ௫ந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
