Police Department News

ஆதரவற்ற முதியோர்களுக்கு காவல் கரங்கள் திட்டத்தின் மூலம் உதவி புரிந்த தொண்டு நிறுவனத்தினர்களுக்கு பாராட்டு

ஆதரவற்ற முதியோர்களுக்கு காவல் கரங்கள் திட்டத்தின் மூலம் உதவி புரிந்த தொண்டு நிறுவனத்தினர்களுக்கு பாராட்டு

மதுரை மாநகரில் உள்ள பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் உற்றார் உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வயதான & ஆதரவற்ற முதியோர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கி, இச்சமூகத்தில் தாங்களும் பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் விதமாகவும், அவர்களுக்கு நிறைவான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் அவர்களை காப்பகங்களிலும் அவர்களது உறவினர்களிடமும் ஒப்படைக்கும் பொருட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களால் “காவல் கரங்கள்” என்ற திட்டம் கடந்த (26.03.2025) அன்று துவக்கப்பட்டு, 54 தொண்டு நிறுவனங்கள் காப்பகங்களுடன் இணைந்து இன்று வரை மாநகரில் 75 ஆதரவற்றவர்கள், முதியோர்களை மீட்டு பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் காப்பகங்களை சேர்ந்த தன்னார்வலர்களை பாராட்டும் விதமாக மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களையும், மென்மேலும் சிறப்பாக செயல்பட தேவையான அறிவுரைகளையும் வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published.