பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் ரவுடிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் துறையினரால் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் பல் வேறு வழக்குகளில் ஈடுபட்டு வந்த 10 ரவுடிகளை கண்டறிந்து அவர்களின் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் காவலில் வைக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் கொலை வழக்குகள் சாதி ரீதியான கொலை வழக்குகள் பழிக்குப் பழியாக நடந்த கொலை வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகளை கண்டறிந்து அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ரவுடிகளை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படையினரின் தேடுதலில் 78 பேர்கள் நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்அதே போல் 66 நபர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட முதல் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தி ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடாது என நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது.
மேற்கண்ட ரவுடிகளின் நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்களின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைப்போர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்கள் கூறினார்.
