
முதியோர் இல்லத்திற்கு தன்னுடைய 5 நாள் சம்பளத்தை அளித்த ஊர் காவல் படை வீரர்
மதுரை மாநகர் தெற்கு வெளி வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மற்றும் சாய் டிரஸ்ட் இணைந்து நடத்தும் முதியோர் இல்லம் நகர்புற வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகர் ஊர்க்காவல் படையில் பணிபுரியும் நண்பர் ஒருவர் HG 119 திரு. மணிகண்டன் ஒரு நாள் ஊதியம் ரூ.560 வீதம் ஐந்து நாட்களுக்கு ரூ.2800 பணத்தை முதியோர் இல்லத்திற்கு பலசரக்கு பொருட்களை வாங்கி கொடுத்து உதவி புரிந்துள்ளார். மேலும் இவர் செய்த சமூக சேவையை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டினர்.
