

மேலூர் வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று குறைகளை கேட்கும் டி.எஸ்.பி.,
மதுரை மாவட்டம் மேலூர் கோட்டத்திற்கு புதிய டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றவர் திரு. ஆர்லியாஸ் ரிபோனி அவர்கள் இவர் மேலூர் கோட்டத்திற்குட்பட்ட மேலூர் கொட்டாம்பட்டி கீழையூர் மேலவளவு காவல் நிலையங்களில் குற்றச்சம்பவங்களில் எண்ணிக்கையை குறைப்பதற்காக முயன்று வருகிறார் இதற்காக இவர் ஒவ்வொரு ஊராட்சிக்கும் சென்று அங்குள்ள மக்களிடம் நேரடியாக குறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிகின்றார்.அதன் ஒரு பகுதியாக இன்று கம்பூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் உடன் கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் சாந்தி பாலாஜி உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.
