Police Department News

அதிவிரைவுப்படையினருக்கு துப்பாக்கிகளை கையாளுதல் போட்டி

அதிவிரைவுப்படையினருக்கு துப்பாக்கிகளை கையாளுதல் போட்டி

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் V. பாலகிருஷ்ணன் உத்தரவின்படியும், திருச்சி சரகம் காவல்துறை துணை தலைவர் A. சரவணன் சுந்தர் அறிவுறுத்தலின் படியும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில், காவல்துறை தலைவரின் இரண்டு அதிவிரைவுப்படை,
காவல்துறை துணைத் தலைவரின் இரண்டு அதிவிரைவுப்படை, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப்படை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப்படை ஆகிய 6 அதிவிரைவுபடையினருக்கு AK – 47, SLR , INSAS மற்றும் 9mm Pistol ஆகிய துப்பாக்கிகளை கையாளுவது ( Stripping and Assembling ) தொடர்பான போட்டி இன்று 24.10.2021 புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற அதிவிரைவுப்படையினருக்கு காவல்துறை தலைவர் அவர்கள் நேரில் கலந்து கொண்டு பார்வையிட்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகராஜ் மற்றும் ஆயுதப்படையினர் செய்திருந்தனர். AK – 47- ல் முதல் மற்றும் இரண்டாம் பரிசினை காவல்துறை அதிவிரைவுப்படையினரும், SLR- ல் முதல் பரிசு கண்காணிப்பாளரின் அதிவிரைவுப்படையினரும்,

துணைத் தலைவரின் இரண்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் இரண்டாம் பரிசினை காவல்துறை தலைவரின் அதிவிரைவுப்படை -1, INSAS- ல் முதல் மற்றும் இரண்டாம் பரிசினை காவல்துறை துணைத் தலைவரின் இரண்டு அதிவிரைவுப்படையினரும், 9mm Pistol- ல் முதல் பரிசினை காவல்துறை துணைத் தலைவரின் அதிவிரைவுப்படை -1, இரண்டாம் பரிசினை காவல்துறை தலைவரின் இரண்டு அதிவிரைவுப்படை- II ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.