Police Department News

போதைப் பொருட்களை கண்டறிய இன்று முதல் ‘பாண்டு மோப்ப நாய் குட்டி’

போதைப் பொருட்களை கண்டறிய இன்று முதல் ‘பாண்டு மோப்ப நாய் குட்டி

போதைப் பொருட்களை கண்டறிய இன்று முதல் ‘பாண்டு’
காவல்துறையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு நுண்ணறிவு பிரிவில் மோப்ப நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில், கொலை, கொள்ளை மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் வளர்க்கப்பட்டு அவற்றிற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமூகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமாக உள்ள நிலையில் அவற்றை காவல்துறையினர் கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை தடுக்கும் வகையில் அவற்றை கண்டுபிடிப்பதற்காக திருச்சி மாநகர காவல் துறை சார்பில் பணிக்கு மோப்ப நாய் குட்டி வாங்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் இருந்து வாங்கப்பட்டுள்ள இந்த மோப்ப நாய் குட்டிக்கு பாண்டு என பெயரிடப்பட்டுள்ளது. பிறந்து 60 நாட்களான இந்த நாய் குட்டிக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு பின்னர் போதைப்பொருட்கள் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
புதிதாக வாங்கப்பட்டுள்ள இந்த நாய்க்குட்டியை போதை பொருள் கடத்தல் பிரிவு டிஎஸ்பி பரத் சீனிவாசன் மற்றும் காவலர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனிடம் காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.