மதுரை, வண்டியூரில் உள்ள மருத்துவ மனையில் தொடர்ந்து பணம் திருடிய ஊழியர் கைது, அண்ணாநகர் போலீசாரின் துரித நடவடிக்கை
மதுரை மாநகரில் வண்டியூரில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவ மனையில் அலுவலகத்திலிருந்த நிர்வாகத்தின் மொத்தப்பணத்தில் குறிப்பிட்ட தொகை மட்டும் தொடர்ந்து 6 மாதங்களாக காணாமல் போனது. மருத்துவ மனை நிர்வாக மருத்துவர் திரு. மதன் என்பவர் இது குறித்து அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார், காவல் உதவி ஆணையர் திரு.சூரக்குமார் அவரககள் அண்ணாநகர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் புகாரினை விசாரித்த குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தனிப்படை பிரிவு சார்பு ஆய்வாயர் திரு. செந்தில்குமார், தலைமை காவலர்கள் திரு. போஸ் மற்றும் திரு. வெங்கட்ராமன், காவலர் திரு. லெக்ஷிமணன், ஆகியோர்கள் துரிதமாக செயல்பட்டு மருத்துவ மனையின் அனைத்து CCTV யின் கடந்த ஒரு மாத பதிவுகளை ஆய்வு செய்ததில் களவு போன நாட்களின் பதிவான சந்தேகத்திற்குறிய நபரை விசாரித்ததில் அந்த நபர் அதே மருத்துவ மனையில் மயக்க மருந்து செலுத்தும் பிரிவில் லேப் டெக்னிசியனாக வேலை பார்க்கும் அஜீத்குமார் என்பது தெரிய வந்தது. அவரை விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒத்துக்கொண்டு தான் திருடிய சுமார் 8 லட்ச ரூபாயில் ஏழு அரை பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் 160 கிராம் வெள்ளி செயின்கள், கை செயின்கள், மற்றும் 2 லட்சத்தி 95 ஆயிரம் ரொக்கம் பணம் கைப்பற்றப்பட்டது. துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்து களவாடிய பணத்தில் வாங்கிய பொருட்களை கைப்பற்றிய தனிப்படையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
எனவே குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க பொது மக்கள் தங்கள் குடியிருக்கும் பகுதிகளில் மற்றும் வணிக நிறுவன வளாகங்களிலும் CCTV கேமராக்களை பொருத்தி திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க உதவுமாறு மதுரை மாகர காவல் ஆணையர் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்கள்.