
அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது.
தேவர்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு ரோச் அந்தோணி மைனர் ராஜ் அவர்கள் ரோந்து சென்றுள்ளார். அப்போது வன்னிக்கோனேந்தல் பகுதியில் உள்ள city union ATM அருகே வன்னிக்கோனேந்தல், நடு தெருவைச் சேர்ந்த மாடசாமி வயது 57 என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டை விற்பனை செய்தவரை கைது செய்யச் செல்லும்போது காவல் உதவி ஆய்வாளரை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் மிரட்டல் விடுத்துள்ளார். பின் மாடசாமியை கைது செய்து தேவர்குளம் காவல் நிலையம் அழைத்து வந்து உதவி ஆய்வாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டு எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
