மதுரையில் சட்டம் நீதி குறித்து விழிப்புணர்வு,மாவட்ட சட்ட ஆணைக் குழு சார்பாக, மதுரை அரபிந்தோ மீரா பள்ளியில் சட்டம் நீதி பற்றி விழிப்புணர்வு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கள்
மக்களுக்கு, சட்டம் நீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என மதுரை, அரபிந்தோ மீரா பள்ளியில் தேசிய சட்ட விழிப்புணர்வு வாரத்தேயொட்டி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகுழு சார்பில் நடந்த மெகா சட்ட விழிப்புணர்வு முகாமில் உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி கே. முரளி சங்கர் வலியுறுத்தினார்.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வடமலை வரவேற்றார், முகாமை துவக்கி வைத்து நீதிபதி கே. முரளி சங்கர் பேசியதாவது; சட்டம் அனைவருக்கும் சமம் ஒரு காலத்தில் ஏழைகளுக்கு சட்டம் எட்டாகனியாக இருந்தது. அனைவருக்கும் கிடைக்க செய்யும் நோக்கில் தேசிய சட்டப்பணிகள் ஆணைய குழு துவங்கப்பட்டு மாநில, மாவட்ட அளவில் செயல்படுகிறது. நீதி மன்றங்களில் வழக்குகள் அதிகரித்துள்ளன விரைவில் தீர்வு காண்பது சிரமம் இதற்கு மாற்றாக லோக் அதாலத் முலம் விரைவில் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது என்றார்.
தலைமை கு்றவியல் நடுவர் ஜெயகுமாரி ஜெமி ரத்தினா, மாவட்ட ஆட்சியர் திரு. அனீஷ் சேகர் , மாநகராட்சி ஆணையர் திரு.கார்திகேயன், மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அரபிந்தோ மீரா கல்வி குழுமத் தலைவர் சந்திரன் பங்கேற்றனர்.
அரசு துறை திட்டங்கள் குறித்த கண்காட்சிகள் நடந்தது. மக்கள் தங்களின் குறைகளுக்கு தீர்வு காண அதிகாரிகளிடம் சென்று மனு கொடுப்தற்கு பதிலாக இங்கு அதிகாரிகளே மக்களை தேடி வந்து மனுக்களை பெற்று உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டன. போக்கு வரத்து காவல்துறை அதிகாரிகள் போதுமக்களுக்கு சட்ட ஆலோசனைகள் மற்றும் பொதுமக்களின் கடமைகள் பற்றியும் பொதுமக்கள் எடுத்துரைத்தனர். பொதுமக்களும் தங்களின் குறைகளை கூறி உடனடி தீர்வு பெற்றனர்.
ரூபாய் 21 லட்சத்திலானநல உதவிகள் வழங்கப்பட்டன, ஒரு குழந்தை திருமணத்தை நிறுத்த குழந்தைகள் நலக் குழு நடவடிக்கை எடுத்தது. இந்த விழாவில் போலீஸ் இ நியூஸ் சார்பாக மாநில செய்தியாளர் அருள்ஜோதி, செளகத் அலி, மற்றும் குமரன், விவேகானந்தன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். சார்பு நீதிபதி தீபா நன்றி கூறினார்
