
மதுரை,ஒத்த கடையருகே நடந்த கொலையில் மேலும் 6 பேர் கைது, ஒத்தக்கடை போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை ஒத்தக்கடையருகே திண்டியூர் கண்மாய்கரையில் முன் விரோதம் காரணமாக ரவுடிகள் வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு காலனி செல்லப்பாண்டி வயது 26, திருச்சி சிங்காரவேல் ஆகியோர் இரு நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக திண்டியூர் பல்லு பாலு வயது 30/2021, கருப்பாயூரணி பாண்டிசெல்வம் வயது 23/2021, ஜெய்ஹிந்துபுரம் பாலமுருகன் வயது 31/2021, கோவில்பாப்பங்குடி ஆனந்த பாலமுருகன் வயது 33/2021, ஒத்தக்கடை கோபி என்ற கோகுல் வயது 46/2021, கூடல்புதூர் முத்தையா சந்திரன் ஆகியோரை ஆய்வாளர்ஆனந்த தாண்டவம் கைது செய்தார் விரைவான நடவடிக்கையெடுத்து உடனே குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த ஆய்வாளர் ஆனந்த தாண்டம் அவர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
