
மதுரை போக்குவரத்து துணை கமிஷனர் மாற்றம்
மதுரை மாநகர் போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் ஈஸ்வரன். இவர், சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக பணியாற்றி வரும், ஆறுமுகசாமி மதுரை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
