
மதுரை மாநகர் ஊர் காவல் படையில் புதிய சரக உதவி துணை தலைவர் அறிமுக விழா
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையாளர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகர ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மாதாந்திர கவாத்து நடைபெற்றது. முன்னாள் சரக உதவி துணை தலைவர் திரு. கார்மேகம் மணி அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். (பணி ஓய்வு ) இவருக்கு பதிலாக திரு. ராம்குமார் சரக உதவி துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திரு. ராம்குமார் அவர்கள் கூறியதாவது பணிக்கு வரும் ஊர்க்காவல் படை வீரர்கள் தங்களது பணியினை சிறப்பாக செய்து விட வேண்டும். மற்றும் பணிக்கு விடுப்பு எடுக்காமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.என்று கூறினார்.மேலும் சிறப்பான முறையில் கவாத்து செய்த ஊர் காவல் படை வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் திரு. வெங்கடேசன் ( வட்டார தளபதி ) அவர்கள் நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.
