

மதுரையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்கள் இருவர் கைது
மதுரை தல்லாகுளம், கூடல்புதூர், புதூர் ஆகிய பகுதிகளில் வீடு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்ததால் காவல் உதவி ஆணையர் திரு. சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் திரு பாலமுருகன் ஆகியோர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மேற்படி குற்றங்களில் ஈடுபட்டு வந்த காளையார் கோவில் காளிராஜன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மதுரை முனிச்சாலை கார்த்திக் ஆகியோரை மேற்படி தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடத்தில் விசாரணை நடத்தியதில் வீடு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 11 வழக்குகளில் தொடர்புடையது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த தனிபடையினர் அவர்களிடமிருந்து 10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 3 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை துணை ஆணையர் திரு. ராஜசேகர் அவர்கள் பாராட்டினார்கள்.
