
மதுரை மாநகர காவல் துறை சிறுவர் மன்றத்தில் முதியவர்கள் பற்றி ஆய்வு 40 சதவீதம் பேர் வாழ்க்கை வெறுமையில் உள்ளனர்
மதுரை கரிமேடு போலீசாருடன் இணைந்து அப்பகுதி சிறுவர் மன்றத்தினர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களிடம் மேற்கொண்ட மனநலன் குறித்த ஆய்வில் 40 சதவீதம் பேர் வாழ்க்கையை வெறுமையுடன் கழிப்பதாக தெரிவித்துள்ளனர் ஆய்வில் 50 சதவீதம் பேர் வாழும் சூழலும் உறவினர்கள் தெரிந்தவர்கள் தங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர் உடல் நலம் குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளனர் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிறுவர் மன்ற பொறுப்பாளரான காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் நடந்தது.
மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனாந்த் சின்ஹா அவர்களின் முயற்ச்சியினால் டி.வி.எஸ்., ஆரோக்கிய நல வாழ்வு அறக்கட்டளையுடன் இணைந்து 5 வகை திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் அதன் அடிப்படையில் இந்த ஆய்வு நடந்தது.வளரிளம் பெண்களுக்கான ரத்த சோகை விழிப்புணர்வு முகாம் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன் கொடுமை விழிப்புணர்வு தங்கள் பகுதியை தூய்மையாக வைத்திருக்க வரை படம் தயாரிப்பது போன்றவை 6 மாதங்களுக்குள் செயல்படுத்தப்பட உள்ளன.என்றார்.
