
அனியாபுரம் ஜல்லிக்கட்டில் விழாக்கமிட்டிகளிடம் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட நிர்வாகமே போட்டியை நடத்தியது மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறந்த காளைகள் சிறந்த வீரர்ளுக்கு பரிசுகள் வழங்கினர்
ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய வீரர்கள் அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க காசுகள் பாத்திரங்கள் பிரிட்ஜ் வாசிங் மிஷின் உள்பட பல பரிசுகள் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்கள் சிறந்த காளைகள் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
24 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்த அவானியாபுரம் கார்த்திக் முதன் முறையாக முதல்வர் ஸ்டாலின் வழங்கிய காரை வென்றார்
19 காளைகளை அடக்கிய வலையங்குளம் முருகன் இரண்டாம் இடம் பெற்று டூ வீலரை வென்றார் 11 காளைக ளை அடக்கிய பரத் 3 இடம் பெற்று பசுவும் கன்றும் வென்றார் காலை 7.25 மணிக்கு துவங்கிய போட்டி மாலை 5.10 க்கு முடிந்தது.7 சுற்றுக்களில் 568 காளைகள் 300 வீரர்கள் களமிறங்கினர்.
