
திருச்சி மாநகரில் புதிதாக 7 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் உருவாக்கம்
திருச்சி மாநகரில் கன்டோன்மென்ட் K.K.நகர், கோர்ட், காந்தி மார்கெட், ஸ்ரீரங்கம் உறையூர் என மொத்தம் 14 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன இதை தவிர கோட்டை கன்டோன்மென்ட் பொன்மலை ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் அனைத்து மகளீர் காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன இதில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்டோன்மென்ட் பாலக்கரை காவல் நிலையம் எல்லைகள் பிரிக்கப்பட்டு கோர்ட் புற காவல் நிலையம் மற்றும் உறையூர் காவல் நிலையம் அரசு மருந்துவ மனை புறக்காவல் நிலையம் உதயமாகின.
இதில் கோர்ட் மற்றும் அரசு மருத்து மனை புறக்காவல் நிலையங்கள் சப் இன்ஸ்பெக்டர்கள் அந்தஸ்தில் செயல்பட்டு வருகின்றன.சப் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் இயங்கி வரும் காவல் நிலையங்கள் குறித்து அவற்றை இன்ஸ்பெக்டர் அந்தஸ்திற்கு மாற்றம் செய்வது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப சென்னை தலைமையிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சமீபத்தில் மாநகரில் கூடுதலாக 7 இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. இது குறித்து காவல் துறை வட்டாரங்களில் விசாரித்த போது திருச்சி மாநகரில் அரியமங்கலம் எடமலைப்பட்டி புதூர் ஏர்போர்ட் பாலக்கரை ஆகிய காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்கள் பணியில் இருந்து வருகின்றனர் இந்த காவல் நிலையங்களில் குற்றப்பிரிவு பணிகளை சாப் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோர்ட் மற்றும் அரசு மருத்து மனை காவல் நிலையங்களும் சப் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் இயங்கி வருகின்றன. மேற்காண்ட காவல் நிலையங்களில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடாங்களுக்கு பதிலாக இன்ஸ்பெக்டர் பணியிடமாக தரம் உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இன்னும் சில மாதங்களில் திருச்சி மாநகரில் புதிதாக 7 இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன இதில் அரசு மருத்துவ மனை காவல் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டரும் கோர்ட் காவல் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டரும் ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
