
மதுரை செல்லூரை சேர்ந்த கஞ்சா விற்பனை செய்த பெண் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை செல்லூர் D2, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான செல்லூர் பாலம் ஸ்டேஷன் பகுதியில் வசித்து வரும் சந்திரன் மனைவி ஒச்சம்மாள் வயது 53/22, இவர் மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை செய்து வந்ததில் செல்லூர் காவல் துறையினரால் கண்காணிப்பிற்குட்படுத்தப்பட்டார் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து வந்ததால் இவருடைய சட்ட விரோத நடவாடிக்கைகளை கட்டுப்பாடுத்துவதற்காக இவரை மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி 29/01/2022 அன்று மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.
