மதுரை அய்யர் காலனியை சேர்ந்த அரசு ஊழியர் தற்கொலை, போலிஸுக்கு தெரிவிக்காமல் உடல் எரிப்பு மனைவி உள்பட 13 பேர் மீது வழக்கு
மதுரை அய்யர் காலனியை சேர்ந்தவர் ஸ்டாலின் வயது 47/22, சூரக்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்தது வாழ்க்கையில் விரக்த்தியடைந்த இவர் சம்பவத்தன்று இரவு தனக்கு தானே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் சுடுகாட்டிற்கு எடுத்து சென்று எரித்து விட்டார்கள். இது குறித்து தனக்கன்குளம் கிராம நிர்வாக அதிகாரி அழகேசன் திருநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் திரு ராஜதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார் அப்போது ஸ்டாலின் மனைவி சுதா மற்றும் உறவினர்கள் மனோன்மணி உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.