மதுரை தெப்பக்குளம் பகுதியில்போக்குவரத்து விதி முறைளை மதித்து வாகனங்களை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
நேற்று 05.02.22 மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் சேர்மத்தாய் வாசன் மகளீர் கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவிகள் மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வாக சாலை விதிகளை பின்பற்றி வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தும், சாலை விதிகளை பின்பற்றாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு காரங்கள் வழங்கியும் அறிவுரைகள் கூறியும், மற்றும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாஸ்க், வழங்கியும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும் ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி மற்றும் சேர்மத்தாய் மகளீர் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
இது போன்ற புதுமையான நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் துறையை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
