மதுரை தெற்கு வாசல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
மதுரை தெற்கு வாசல் காவல் நிலையம் பின்புறம் பழைய புஞ்சை மேட்டு தெருவில் உள்ள மாநகராட்சி காலி இடத்தில் கிடந்த பழைய பொருட்கள் காய்ந்த இலைகள் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் போன்றவை இன்று நண்பகலில் தீ பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திரு. . பாண்டி மற்றும் மீனாட்சியம்மன் கோவில் நிலைய அலுவலர் திரு. கே.ஆர். சேகர் அவர்களின் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்ளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
தீ விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகே அங்கன்வாடி மையமும் , முதியோர் இல்லம் உள்ளது.
நல்ல வேளையாக குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.
தீ விபத்தால் யாருக்கும் காயம் அடையவில்லை.
தீ விபத்திற்கான காரணம் பற்றி தெற்கு வாசல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. புவனேஸ்வரி அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
