Police Department News

தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் துரித நடவடிக்கையெடுத்த மதிச்சியம் காவல் ஆய்வாளர்

தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் துரித நடவடிக்கையெடுத்த மதிச்சியம் காவல் ஆய்வாளர்

மதுரை மாநகரம் மதிச்சியம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு. சாதுரமேஷ் அவர்கள் பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் நேரில் வந்து வழங்கிய ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 21 ம் தேதி ஆய்வாளர் திரு. சாதுரமேஷ் அவர்கள் தனிப்படை அமைத்து நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அதிகுந்தகண்ணன் மற்றும் அழகுபாண்டி, செல்வராஜன் ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

செக்காணூரணியிலிருந்து கஞ்சா கடத்தி வந்து மதிச்சியம் புளியம்தோப்பு, மற்றும் ஆழ்வார்புரம், பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய மதுரை, வைகை வடகரை, மதினாபள்ளிவாசல், அருகில் உள்ள பழைய இடிந்த கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்ததை சம்பவ இடத்திலேயே மறைந்திருந்து ரகசிய தகவலாளி அடையாலம் கட்டி மறைந்ததும் போலீசார் சுற்று வளைத்து பிடித்தனர், அதில் 5 பேரில் ஆழ்வார்புரத்தை சேர்ந்த மைதீன் ஒருவன் மட்டும் தப்பியோட மீதமுள்ள நான்கு பேரும் பிடிபட்டனர். அவர்கள் ஆழ்வார்புரத்தை சேர்ந்த சரவணக்குமார் என்ற வாழைப்பழம் சரவணன் வயது 24/21, சரவணன் வயது 24/21, கண்ணன் என்ற மொக்க கண்ணன் வயது 24/21, ஜெயபால் என்ற ஜெயின் ஜெயபால் வயது 42/21, இவர்களிடமிருந்து 22.500 கிலோ கஞ்சாவை கைபற்றி அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து குற்றத்தை ஒப்புகொண்டதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவர்களை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.