கடந்த 31 ம் தேதி தமிழக டி.ஜி.பி திரு சைலேந்திரபாபு அவர்கள் சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார் அது சமயம் சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக அலங்கார அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது
. நிகழ்ச்சியின் தொடார்ச்சியாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு நஜ்முல்ஹோதா அவர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார் மேலும் மாவட்ட ஆட்சியர் திரு கார்மேகம் அவர்கள் மரியாதை நிமித்தமாக வந்து சந்தித்தார்கள் பின்னார் சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு பிரவின்குமார் அபினவ் சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் திரு அபினவ் ஆகியோர்கள் வரவேற்றார்கள் சேலம் வருகைபுரிந்த தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் அவர்கள் சேலம் சரக காவல் உயர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கினார் பின்னர் சேலம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய. காவல் துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
