மதுரை M.K.புரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு ஜெய்ஹிந்புரம் போலீசார் விசாரணை
மதுரை M.K.புரம் வாஞ்சிநாதன் தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் நாகசாமி மகன் சுரேந்திரன் வயது 70/22, இவர் கீரைத்துரை மெயின் ரோட்டில் சோமு டிரான்போர்ட்டில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வேலைக்கு சென்று வர அவர் வேலை பார்க்கும் நிறுவனம் இரு சக்கர வாகனம் ஒன்றை கொடுத்திருந்தது இதை அவர் வழக்கமாக இரவு நேரத்தில் தனது வீட்டிற்கு கீழ் தளத்தில் நிறுத்தி விட்டு பகல் நேரத்தில் பணிக்கு எடுத்து செல்வது வழக்கம் அதே போல் கடந்த 1 ம் தேதி கீழ் தளத்தில் நிறுத்தி விட்டு மறு நாள் காலையில் சென்று பார்க்கும் போது வண்டியை காணவில்லை இதனை தோடர்ந்து அவர் மதுரை ஜெய்ஹிந்து புரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார் இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. ஐசக் சாமுவேல் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
