
கடலூர்: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று அடையாளம் தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஜாக்கெட் பாவாடை மற்றும் காலில் செருப்பு அணிந்து இருந்தார். அவரது உடல் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. இதைப் பார்த்த சாமியார் பேட்டை பொதுமக்கள் புதுச்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். பின்னர் வந்த காவல்துறை அந்த உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது.