


மதுரையில் தூய்மை பணியாளர்களின் பணியிட மாற்றத்தை கண்டித்து ஆர்பாட்டம்
மதுரை மாநகராட்சியில் ஒரே வார்டில் பல ஆண்டுகளாக பணியாற்றும் துாய்மை பணியாளர்களை பணியிடம் மாற்றம் செய்வதைக் கண்டித்து, சுப்பிரமணியபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்களின் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரியும், கந்த மாதம் முதல் ரூபாய் 3000/-சம்பளத்தில் குறைப்பது தொடர்பாகவும் கடந்த ஒரு ஆண்டு காலமாக PFI பணம் போய் சேராத து தொடர்பாக, வார்ட்டு கவுன்சிலர்கள் வருகை பதிவேடு சோதனை செய்வது தொடார்பாகவும் மற்றும் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் திரு. அம்சராஜ் தமிழ்நாடு சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் மாநில பொது செயலாளார் அவர்கள் தலையில் நடைபெற்றது. மற்றும் பூமிநாதன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட அமைப்பாளர், பாலசுப்பிரமணி CITUபொது செயலாளர் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில்
வி.சி.க., தொழிற்சங்க அமைப்பாளர் பூமிநாதன் கூறியதாவது: மாநகராட்சி துாய்மை பணியாளர்களை பணியிடம் மாற்றுவது வரலாற்றிலேயே இல்லை. அந்தந்த வார்டுகளில் வசிப்பவர்கள்தான் அங்கு பணியமர்த்தப்படுவர்கள் அப்படித்தான் பணியாற்றி வருகின்றனர். திடீரென வெவ்வேறு வார்டுகளுக்கு பணியிடம் மாற்றுவது நியாயமில்லை. இதனால், அந்த உத்தரவை திரும்ப பெற கோரி 7 வார்டுகளை சேர்ந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த உத்தரவை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதால் ஆர்பாட்ட காரர்கள் கலைந்து சென்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30ல் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.சி.ஐ.டி.யூ., மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு சுகாதார பணியாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி அம்சராஜ், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
