Police Department News

கந்துவட்டி கொடுமைகளை தடுக்க ‘ஆபரேஷன் கந்துவட்டி’-காவல் துறை அதிரடி

கந்துவட்டி கொடுமைகளை தடுக்க ‘ஆபரேஷன் கந்துவட்டி’-காவல் துறை அதிரடி

காவல் துறை இயக்குனர் உத்தரவின் பேரில் கந்துவட்டி மூலம் மக்கள் உயிரிழப்பை தடுப்பதற்கும் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு “ஆப்பரேஷன் கந்துவட்டி” என்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டி சம்பந்தமாக வரும் புகார்களுக்கு உடனடியாக துரித நடவடிக்கை உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2021ல் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கந்து வட்டி வசூல் தொடர்பாக77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் 116 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.39 வீடுகளில் சோதனை செய்யப்பட்டு சொத்து பத்திரங்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் இதுவரையில் கந்துவட்டி தொடர்பான 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பொது மக்களை ஏமாற்றி அவர்களின் வீட்டில் சோதனை மேற்கொண்டு எதிரிகளிடம் இருந்து பெறப்பட்ட வெற்று ஆவணங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் கைது செய்யப்படாத குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கும் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் வீடுகளில் சோதனை செய்வதற்கும் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டி புகார்கள எவர் மீதேனும் வந்தால் சட்டரீதியாக துரிதமாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.