
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்த திருநங்கை
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் திருநங்கை ஒருவர் பிணமாக இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு பெண் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
மேலும் அனுப்பானடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தீயணைப்பு அதிகாரி கே.ஆர்.சேகர் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பிறகு தெப்பக்குளத்தில் கிடந்த பிணம் மீட்கப்பட்டது. அப்போதுதான் அது பெண் அல்ல, திருநங்கை என்பது தெரிய வந்தது.
அவர் சிமெண்ட் கலர் டாப், ரோஜாப்பூ கலர் சுடிதார் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.
இது தொடர்பாக மதுரை தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
