

நிதித்துறை பரிந்துரையின் படி டிஜிபி அவர்கள் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு எரிபொருளை சிக்கானமாக பயன்படுத்துங்கள் மீறினால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்
காவல் துறையில் அரசு வாகனங்களுக்கு மாதந்தோறும் அதிகாரிகளின் ரேங்கிற்கு ஏற்ப எரி பொருள் ஒதுக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு ஆய்வாளர்களுக்கு 140 லிட்டர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட யூனிட் ஆய்வாளர்களுக்கு 95 லிட்டரும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. போலீஸ் பஸ் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு 95 லிட்டரும் டூ வீலர் ரோந்து செல்ல 35 லிட்டரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக செல்வது வி.ஐ.பி. பாதுகாப்பு போன்ற நேரங்களில் மாத ஒதுக்கீட்டை விட கூடுதலாக எரி பொருள் செலவானால் கமிஷனர் அல்லது மாவட்ட எஸ்.பி. யிடம் சிறப்பு அனுமதி பெற்று அரசு செலவு வரவு வைக்கப்படும் இந்நிலையில் செலவினங்களை கட்டுப்படுத்த எரி பொருளை சிக்கனமாக பயன்படுத்த அரசு துறைகளுக்கு நிதித்துறை பரிந்துரைத்தது.இதன் படி நிர்னயித்த அளவிற்குள் எரி பொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் கூடுதலாக செலவழிக்க. சிறப்பு அனுமதி இனி தரப்படாது. கூடுதலாக செலவழித்தால் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்
இது சம்பந்தமாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது குற்றவாளியை தேடி வெளியூர்களுக்கு செல்லும் போது எரி பொருள் செலவாகிறது. உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று எரிபொருளை கூடுதலாக கேட்டு பெற்று வந்தோம் தற்போது இந்த உத்தரவால் ரோந்து செல்வது குற்றவாளிகளை தேடி செல்வது போன்றவை பாதிக்கப்படும் என்றனர்.
