


மது மற்றும் போதை பொருட்களின் தீமை குறித்து தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் ஏற்பாட்டில் மதுரை தியாகராசர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.
மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் நகர் காவல்துறையினருக்கு நகரின் முக்கிய மற்றும் பேருந்து நிலையம் பகுதியில் மது புகையிலை போன்ற பொருள் ஒழிப்பு பாதகைகள் அமைக்க உத்தரவிட்டார். காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின் பேரில் மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆலோசனைப்படி அதன் ஒரு பகுதியாக தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் ஏற்பாட்டில் மதுரை தியாகராசர் கல்லூரி மாணவ மாணவியர்க்கு காவல் உதவி செயலி பதிவிறக்கம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு தீமை குறித்து பல்வேறு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
