



தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காவல் துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன். அவர்களின் உத்தரவின் பேரில் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் ஆபத்து குறித்து எடுத்துக் கூறும் வகையில் பாலக்கோடு காவலர்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு காவல் ஆய்வாளர் திரு.தவமணி அவர்கள் முன்னிலை வகித்தார். பாலக்கோடு புதிய துணை கண்காணிப்பாளர் R.சிந்து D.S.P அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதில் கஞ்சா, மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளையும் பற்றி மாணவர்களிடையே எடுத்துக் கூறினார்.மேலும் இது போன்ற பிரச்சினை தொடர்பாக தொலைபேசி வாயிலாக தெரிவிக்கவும் என எடுத்து கூறினார் இதனைத் தொடர்ந்து பாலக்கோடு காவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் அனைவரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
