



மேலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது
மேலூர் அருகே கீழையூரில் அரசால் தடை செய்யப்பட்ட 20 மூடைகள் புகையிலை பொருள்கள் 240 Kg பறிமுதல் ஒரு ஆட்டோ இரண்டு டூவீலர் மற்றும் 3 பேர் கைது கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவைத் தொடர்ந்து மேலூர் டிஎஸ்பி அவர்களின் மேற்பார்வையில் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் சார்லஸ் அவர்கள் கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் மேலூர் உட்கோட்ட தனி பிரிவு போலீசார் மேலூர் குற்றப்பிரிவு போலீசார் ஆகியோர்கள் சேர்ந்து நடத்திய புகையிலை தடுப்பு சம்பந்தமான நடவடிக்கையில்
1) சித்திக் வயது 47
ஜோதி நகர் மேலூர்
என்பவர் ஒரு ஆட்டோ நெறைய கணேஷ் புகையிலை மூடைகளை ஏற்றுக் கொண்டும்
மற்ற இரண்டு டூவீலர்களில்
2)சாகுல் ஹமீது-வயது 55 அண்ணா காலனி மேலூர்
மற்றும்
3)அலிப்கான்-வயது 47 காந்திஜி பூங்கா மேலூர் என்பவர்கள் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை மூடைகளை ஏற்றி கொண்டு கீழையூர் அட்டப்பட்டி சந்திப்பு அருகே புகையிலை பொருள்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய வந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர் மேற்படி நபர்கள் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெரிய அளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வருகிறது மேலும் இந்த புகையிலை பொருட்கள் சம்பந்தமாக வேறு நபர்களுடன் தொடர்பு இருக்கிறதா அல்லது வேறு எங்கு அது பெரிய அளவில் பதுக்கி வைத்துள்ளார்கள் என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.s
