

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள சோலைஅழகுபுரம், ஜானகி தெருவில் இட ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் நேற்று சாலை மறியல்
மதுரை ஜெய்ஹிந்துபுரம் தெற்குவாசலுக்கு உள்பட்ட பகுதியில் ஜானகி தெருவை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
சோலை அழகுபுரம், ஜானகி தெரு பொதுமக்கள் ஜெய்ஹிந்துபுரம் சாலையில் அமர்ந்து சுமார் 30 நிமிடங்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்
சோலைஅழகுபுரம் பகுதியில் உள்ள ஜானகி தெரு பாதையை தனியார் அடைத்ததால் அனைவரும் சுற்றி வரயிருப்பதாக கூறி சாலை மறியல் செய்தனர்.
அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து ஜெய்ஹிந்துபுரம் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. அ. கதிர்வேல் அவர்கள் மற்றும் தெற்கு வாசல் போக்குவரத்து ஆய்வாளர் திரு. கணேஷ்ராம் மற்றும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து. பொதுமக்கள் இடம் சமரசம் செய்து. அதன்பிறகு பொதுமக்கள் இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
