


குட்கா பொருட்களை விற்க மாட்டோம் என வணிகர்கள் உறுதி மொழி F1 காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் முன்னிலையில் நடைபெற்றது.
வணிகர்கள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டது தொடர்பாக
இன்று 10.08.2022 ம் தேதி 20.00 மணி அளவில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமி நாயக்கன் தெரு காமாட்சி திருமண மண்டபத்தில் வணிகர்கள் ஆண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை வணிகர்
சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து வணிகர்கள் நலச்சங்கம் சார்பில் சுமார் 400 வியாபாரிகள்
திரு ராஜாராம் சிந்தாதிரிப்பேட்டை ஆய்வாளர் சட்டம் ஒழுங்கு அவர்கள் முன்னிலையில் வாய் புற்று நோய்களை உண்டாக்கிடும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா – குட்கா போன்ற பொருட்களை கண்டிப்பாக எங்கள் கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு மேற்படி வாசகம் அடங்கிய பதாகையை தங்கள் கடைகளில் கட்டப்பட்டு வருகிறார்கள்.
