Police Department News

டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் அதிரடி உத்தரவு

டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் அதிரடி உத்தரவு

தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

தமிழக காவல்துறையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை நீண்டா நாட்களாகவே இருந்து வருகிறது காவல்துறை பணியில் சேரும் போலீசாரை அதிகாரிகள் தங்களது வீடுகளில் வேலை செய்ய பயன்படுத்தி வரும் இந்த ஆர்டர்லி முறை தொடர்வது பற்றி சென்னை உயர் நீதி மன்றம் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் வேதனை தெரிவித்திருந்தார்

மேலும் ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும் ஆனால் அரசு மற்றும் டிஜிபியிடம் இருந்து அது வருவதில்லை என நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணி கூறியுள்ளார். ஆர்டர்லி பயன்படுத்தும் காவல்துறை உயர் அதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமையுண்டு.எனவே இந்த வழக்கில்
டிஜிபியை எதிர் மனுதாரராக சேர்க்கிறேன் ஆர்டர்லி முறையை ஒழிக்க வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் அரசு முத்திரையை தவராக பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வருகிற 18 ம் தேதிக்குள் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்

ஆர்டர்லி முறை ஒழிப்பு குறித்து சென்னை உயர் நீதி மன்றம் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஏடிஜிபிகள் மகேஷ்குமார் அகர்வால் ஏடிஜிபி சங்கர் ஐஜி லோகநாதன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக பணியாற்றக்கூடிய ஆர்டர்லிகளை உடனாடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருக்கிறார் இதை செயல்படுத்தாத அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.