மதுரை தத்தநேரி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 3 இளைஞர்களை கைது செய்த செல்லூர் போலீசார்
மதுரை, தத்தநேரி பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை தத்தநேரி, பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தத்தநேரி ரயில்வே தண்டவாளம் அருகே பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமர்ந்திருப்பதை கண்டனர், அப்போது அவர்களை விசாரிக்க சென்ற போது, காவல் துறையினரை பார்த்தவுடன் அனைவரும் ஓட்டம் பிடித்தனர், இந்த நிலையில் இளைஞர்களை விரட்டிச் சென்றனர், அதில் 3 நபர்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை கைப்பற்றினர், மேலும் தலைமறைவான 6 பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
