



14.08.2022
சுதந்திர தினத்தை முன்னிட்டு தன்னுடைய ஊதியத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு நிதி வழங்கி “வேண்டாம் போதை விழிப்புணர்வு “ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்கள்
தமிழக முதல்வர் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தபட்டுவருகிறது.
J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சரவனபாண்டியன் தலைமையில் மற்றும் திரு.பிரகாசம் (ஆட்டோ ஓட்டுனர் வேளச்சேரி பகுதி அமைப்பாளர்) மற்றும் திரு.கோபி(President RCC Bluewaves CHTM தாய் நாடு சுய உதவி குழு திருவான்மியூர் மூலம் வேண்டாம் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
போதையால் சிறுபிள்ளைகள், மாணவர்கள், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குடும்பம் சீரழிந்து வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு பெண்கள் , இளைஞர்கள் படும் வேதனை அதிகமாக இருக்கிறது.இதை கருத்தில் கொண்டு பெசண்ட் நகர் ஆட்டோ ஓட்டுனர் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவும் குடும்பம், சமுதாயம் பாதிக்ககூடாது என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்திற்கு திரு.செல்வமணி அவர்கள் சொந்த பணத்தை நிதியாக கொடுத்து வாழ்க்கையில் முன்னேற பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
