Police Department News

காவல் உதவி ஆய்வாளர் பணி – திருச்சியில் பெண்களுக்கு உடல் தகுதி தேர்வு

காவல் உதவி ஆய்வாளர் பணி – திருச்சியில் பெண்களுக்கு உடல் தகுதி தேர்வு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 338 பெண்களுக்கு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் டி.ஐ.ஜி சரவண சுந்தர், ஜெயபாரதி ஆகியோர் முன்னிலையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது நேற்று தேர்வில் கலந்து கொண்ட 233 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு உயரம் மற்றும் மார்பளவு அளத்தல், 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற 233 பேரில் 130 பேர் தகுதி பெற்றனர். அவர்களுக்கு இன்று இரண்டாம் கட்டமாக உடல் திறன் தேர்வு உயரம் தாண்டுதல் அல்லது நீளம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல் ஆகியவை நடைபெற்றது. ஆயுதப்படை மைதானத்திற்குள் தேர்வாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மற்ற உறவினர்கள் நண்பர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வாளர்கள் கொண்டு வந்த செல்போன் நுழைவுப் பகுதியிலேயே வாங்கி வைக்கப்பட்டன. உடற்தகுதி தேர்வு முழுவதும் வீடியோவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.