
விநாயகர்-காளியம்மன் கோவில்களில் துணிகர கொள்ளை
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு பூசாரி வன்னியராஜ் வழக்கம் போல் கோவிலை பூட்டி சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்குவந்த மர்மநபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்து காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு தப்பினர். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த பூசாரி வன்னியராஜ் கதவு உடைக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பணம் கொள்ளை போயி ருந்தது.
இதுகுறித்து குடியிரு ப்போர் நலச்சங்க செயலாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
காளியம்மன் கோவில்
ஆலங்குளம் தேவர் நகர் முக்கு ரோடு பகுதியில் கரையடி கருப்பசாமி கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் அங்கிருந்த அம்மனின் 6கிராம் நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கிரீடம் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பினர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கொள்ளை கும்பல் சிறிய கோவில்களை குறிவைத்து நகை-பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
