
நீதிபதிகளுக்கு சிறப்பு சலுகைகள்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை அலுவலகம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்து வெளியிட்டுள்ள அறிவிப்பு: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெறுவோர் ஓய்வு தேதியிலிருந்து ஆறு மாத காலத்துக்கு வாடகையின்றி அரசு பங்களாவில் தங்கலாம். மேலும் 24 மணி நேர பாதுகாப்பும் அளிக்கப்படும். ஓய்வு பெற்ற தேதியிலிருந்து ஒரு ஆண்டுக்கு டிரைவர் உதவியாளர் அரசு சார்பில் நியமிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
