Police Department News

டிஜிபி பேசுகிறேன் என கூறி காவல் அதிகாரியை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரிய இளைஞர்

டிஜிபி பேசுகிறேன் என கூறி காவல் அதிகாரியை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரிய இளைஞர்

மணிமுத்தாறு போலீஸ் அதிகாரியிடம் டிஜிபி பேசுவதாக கூறி 7.5 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது நைஜீரிய இளைஞர் என சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு 12-வது சிறப்பு பட்டாலியன் கமாண்டண்டாக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் டி.ஜி.பி. சைலேந்திரபாபு என்று கூறியதோடு, உங்களுக்கு அமேசான் பரிசு கூப்பன் அனுப்பப்படும், அதனை வாங்குமாறு கூறியுள்ளார்.
அந்த போன் நம்பரில் வாட்ஸ்-அப் புகைப் படத்தை பார்த்த போது அதில் டி.ஜி.பியின் படம் இடம் பெற்றிருந்ததது. இதனால் தனக்கு போன் செய்தவர் டி.ஜி.பி.தான் என
நம்பிய கார்த்திகேயன் பரிசு கூப்பனை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக்கொண்டார். இதேபோல் பல்வேறு தவணைகளில் சுமார் ரூ. 7½ லட்சம் வரை ஆன்லைன் மூலம் பணத்தை கார்த்திகேயன் இழந்தார்.
இதனால்அதிர்ச்சி அடைந்த அவர் சக ஊழியர்களிடம் விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதுதொடர்பாக அவர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் பரிசு கூப்பன் மோசடியில் ஈடுபட்டது நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் என்பது தெரியவந்தது. கார்த்திகேயனை போல் தமிழகம் முழுவதும் 7 அதிகாரிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். முதலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு போன் செய்த நபர்கள் பின்னர் ஐ.பி.எஸ். அதிகாரிகள், வனத்துறை என பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் போன் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக டி.ஜி.பி.சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ அனுப்பி உள்ளார். அதில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் விழிப்புடன் இருக்குமாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.