
சென்னை மாதவரத்தில் திருமணம் செய்வதாக கூறி காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை
சென்னை மாதவரம் அடுத்த சின்னமாத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் டேனியல் ராஜா வயது 45 இவரது மகள் ஏஞ்சல் வயது 23 கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த ஏஞ்சல், படிப்பை தொடராமல் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர் தனது வீட்டு அருகே வசித்து வரும் வேன் டிரைவர் ஒருவரை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இரு வீட்டாரும் பேசி திருமணம் செய்ய இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தனுஷ் ஏஞ்சலிடம் பேசுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஏஞ்சல் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் மாதவரம் பால் பண்ணை போலீசார் விரைந்து வந்து ஏஞ்சல் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகளை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு டேனியல் ராஜா மாதவரம் பால் பண்ணை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
