
மதுரை பேரையூர் அருகே ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது
மதுரை ஜெய்ஹிந்த்புரம் கார்த்திபாண்டி 22. (ரைஸ்மில் நடத்தி வருபவர்) செல்லூர் காதர்உசேன் 29,
இருவரும் பேரையூர்அருகே பழையூரில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி 50 மூடைகளில் வைத்திருந்தனர்.
தகவல் அறிந்து குடிமை பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் அங்கு வந்தபோது, லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றனர்.
அதிகாரிகள் இருவரையும் கைது செய்து 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
