

மனநலம் பாதிக்கபட்ட நபரை பத்திரமாக மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசார்
மதுரை சாமநத்தம் பகுதியை சேர்ந்த பூரணம் என்பவரது மகன் திரு பாலசுப்பிரமணி வயது 40 மனநலம் குன்றியவர் மேலும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆன இவர் ஒரு ஆசிரமத்தில் தங்கியிருந்து வருகிறார் தீபாவளி பண்டிகைக்காக இவரது தாயார் இவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் இந்நிலையில் நேற்று காலை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செல்லும் வழியில் இவர் தவறுதலாக வேறு பேருந்தில் ஏறி மாயமாய் விட்டார் இவரது தாயார் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்த நிலையில் இன்று காலை மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் சுற்றித்திரிந்த இவரை அந்தப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த மதுரை தெற்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. உதயகுமார் சிறப்பு சார்பாய்வாளர் திரு. செல்வ பாண்டி தலைமை காவலர் திரு. மணி மற்றும் காவலர்கள் திரு. திருப்பதி மற்றும் அருண் பிரபு ஆகியோர் மீட்டு தாயார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளித்து அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
