
மதுரை செல்லூர் குலமங்கலம் இணைப்பு
சாலையை சீரமைக்க கோரி பகுதிவாழ் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மறியல்
மதுரை செல்லூர் குலமங்கலம் இணைப்பு சாலையை சீரமைக்க கோரி பகுதி வாழ் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
சாலை விபத்துகளை ஏற்படுத்தும் குலமங்கலம் மெயின் ரோட்டை சீரமைக்க கோரி நேற்று மறியல் போராட்டம் நடந்தது.
பல ஆண்டுகளாக சாலைகள் போடப்படாமல் இருக்கும் வ.உ.சி 1 , 2, அண்ணா தெரு , பாரதிதாசன் தெரு, சத்யா நகர், ஆபீசர் டவுன் ஆகிய தெருவில் சாலைகளை உடனடியாக அமைக்க வேண்டும். சத்தியமூர்த்தி மெயின்ரோடு , பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும்.குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
22, 23, 24 ஆகிய வார்டுகளில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதிக்குழு செயலாளர் பாலு தலைமையில் இந்த மறியல் போராட்டம் மீனாம்பாள்புரம்-குலமங்கலம் மெயின் ரோடு சக்கரை செட்டியார் படிப்பகம் அருகில் நடந்தது.
இதில் 23-வது வார்டு கவுன்சிலர் குமரவேல், மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன் ஆகியோர் பேசினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
