


27.11.2022. இன்று J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு .அசோக்குமார் தலைமையில் திரு.பசுமைமூர்த்தி அவர்கள் சார்பில்
” மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி”நடைபெற்றது.
இன்று பெசண்ட் நகர் கடற்கரை எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் திரு.பசுமை மூர்த்தி அவர்கள் இன்றும் என்றும் நாம் சுவாசிக்க Oxygen தேவை , என்பதை உணர்ந்து மக்களுக்காக மரக்கன்றுகளை நட்டு சாதனை செய்து வருகிறார். மரங்கள் மூலம் காற்று மாசு அடைவதை தவிர்த்தும் மரங்கள் மூலம் மழை மற்றும் இயற்கை சுவாசத்தை சுவாசிக்க உயிர் வாழ உயிரை காப்பாற்ற இன்னும் பல நன்மைகளை மக்களுக்கு மரங்கள் பயன்படுகிறது.
சமூக சேவையை தியாகமாகவும் பொதுமக்கள் மீது அக்கறை உள்ள காவல்துறையினர் தற்போது சமூக ஆர்வலரைகொண்டு பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர் ஆங்காங்கே மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர். மற்றும் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்ட பகுதிகள் அடையாறு, பெசண்ட் நகர், பாலவாக்கம், சோழிங்கநல்லூர், நந்தனம்,கோட்டூர்புரம், துரைப்பாக்கம், சைதாப்பேட்டை,ஆகிய இடங்களில் மரங்கள் நட்டு சாதனை படைத்து வருகின்றார்கள்.J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு .அசோக்குமார் மற்றும் அவருடன் பணி புரியும் காவலர்கள் திரு .பாலச்சந்தர் திரு .பாரதிராஜா திரு மணிகண்டன் ஆகியோர் சிறப்பாக மரக்கன்றுகளை நட்டு விழாவை நன்றியுடன் நிறைவு செய்தனர்.
