
தமிழகத்தில் போலீஸார் வாகன சோதனையின்போது வெளிப்படையாக இருக்கும் வகையில் சாலை வீதி மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க இ-சலான் இயந்திரம் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரெடிட் அல்லது ஏடிஎம் கார்டுகளை ‘ஸ்வைப்’ செய்து அபராதத் தொகையை போலீஸார் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தில் வாகன உரிமையாளர் யார்?, இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா?, திருட்டு வாகனமா? என்பன உட்பட பல் வேறு விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. கார்டு மூலம் பணம் செலுத்த இயலாதவர்களுக்கு இ-சலான் ரசீது வழங்கப்படும்.
இதை பயன்படுத்தி எஸ்பிஐ வங்கியில் குறிப்பிட்ட நாட்களில் பணம் செலுத்த வேண்டும்.
மேலும் வாகனச் சோதனையின்போது போலீஸாருக் கும், ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டால் தவறு யார் மீது என்பதைக் கண்டறியப் படமெடுக்கும் கேமரா வசதியும் இ-சலான் இயந்திரத்தில் உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் மதுரையில் போக்குவரத்து, சட்டம்-ஒழுங்கு போலீஸாருக்கு ஏற்கெனவே 35 இ-சலான் இயந்திரங்கள் வழங்கப் பட்டுள்ளன. இந்நிலை யில், மேலும் 50 இயந்திரங்கள் ஓரிரு நாளில் வழங்கப்பட உள்ளது.
குறிப்பாக வாகனத் தணிக்கை அடிக்கடி நடைபெறும் பகுதி, மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள காவல் நிலையப் போலீஸாருக்கு இந்த இயந்திரம் கூடுதலாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை நகர் போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறியதாவது: மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக காகித ரசீது கொடுத்து, அபராதம் வசூலிப்பதில்லை. இந்த புதிய திட்டத்தால் போலீஸார் மீது வாகன ஓட்நர்களுக்கு சந்தேகம் வராது. நீதிமன்றம் செல்ல வேண்டி யதில்லை. கார்டு இல்லாதவர் களுக்கு வழங்கப்படும் அபராதத் தொகைக்கான ரசீதை பயன்படுத்தி எஸ்பிஐ வங்கியில் செலுத்த வேண்டும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டு வோரைத் தவிர ஹெல்மெட் உட்பட மற்ற அனைத்து விதிமீறல்களுக்கு இ-சலான் முறையில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாளில் அபராதத்தை செலுத்த வில்லை எனில், ஆன்லைன் பரி வர்த்தனைக்கு தடை ஏற்படுத்தப் படும். வங்கிகளில் எஸ்பிஐ-க்கு மட்டுமே இந்த வசதி வழங்கப் பட்டதற்கு அந்த வங்கியே இ-சலான் இயந்திரங்கள் வழங்க உதவி செய்துள்ளது.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.