Police Department News

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ராஜ்குமார் (வயது.24) இவர் இஞ்னியரிங் முடித்துவிட்டு ஓசூரில் உள்ள அமேசான் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்,
இவரது பக்கத்து ஊரான ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் பிரியதர்ஷினி (வயது.22), இவர் பாலக்கோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் எம்.எஸ்.சி 2ம் ஆண்டு படித்து வருகிறார்,
ராஜ்குமார், பிரியர்தர்ஷினி இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 26ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே கதிர்புரத்தில் உள்ள ரெங்கநாதர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்,
நேற்று பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி பாலக்கோடு போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்தனர்.
இன்ஸ்பெக்டர் தவமணி இரு தரப்பினரையும் அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில் பெண்ணின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் பிரியதர்ஷினி காதலனுடன் தான் செல்வேன் என தெரிவித்ததால், போலீசார் காதலுடன் காதலியை அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.