
மதுரையில் ரூ. 18 லட்சம் மோசடி; தம்பதி மீது புகார்
மதுரை ஒத்தக்கடை சுதந்திரா நகரை சேர்ந்தவர் பாண்டிசெல்வம். இவர் ஒத்தக்கடை போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சாம்சன்பால் தன்னிடம் உள்ள காரை கொடுப்பதாக கூறி ரூ. 18 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டனர். இதற்கு உடந்தையாக அவரது மனைவி சக்திபிரியா, உறவினர் தேவராஜ் ஆகியோர் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
